நாளையும் வருவாயா நீ...??
நள்ளிரவு.
நித்திரை அழைக்க
கண்மூடினேன்
பிளாஸ்டிக் பைகளின் சலசலப்பு.
எழுந்து விளக்கெரித்தேன்.
எதுவும் தென்படவில்லை.
மீண்டும் அயர்ந்தேன்.
இப்போது 'தொப்'பென்று காலிடுக்கில்.
போர்வை உதறி எழுந்தேன்.
மீண்டும் விளக்கெரித்தேன்
கொம்பு தேடியது மனது.
கொலை செய்ய .
கொம்பு கிடைத்தது.
எங்கு ஒடியும் கிடைக்கவில்லை நீ.
வேடிக்கையின்
வேர் ஆய்ந்தேன்.
மேஜையில் தென்பட்டது ஓர் ஆப்பிள்.
இழுவைக்குள் அடைத்துவிட்டு
இளைப்பாறினேன் இருட்டில்.
இரைச்சல் மீண்டும் .
பாவம் நீ.
தேடவிட்ட சந்தோஷத்தில் நான்.
எனக்கும் உனக்குமாய் ஆப்பிள் போராட்டம்.
கணத்தது மனது.
உன் விடா முயற்ச்சியாலும்,
உறக்கம் இழக்க நான் விரும்பாததாலும்.
இழந்த ஆப்பிளோடு நான்.
இளித்தாய் நீ.
எனக்கு தெரியும்படி
உண்பதில்
உடன்பாடிருக்காது உனக்கு.
ஒரு நாள் கண்டு மகிழதான் போகிறேன்
நீ உண்ணும் அழகை.
கொள்ளென கொடுத்ததில்
தூக்கம் ஆழ்த்தியது
என்னையும் என் கவிதையையும்.
நாளையும் வரச்சொல்லுங்கள் என் எலியை....!!!
6 comments:
நாளைக்காவது அந்த ஆப்பிளை குடுத்துறுங்க plz..
சாதாரண நிகழ்வை அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
நல்ல கவிதை. இதில் உள்ள சில வார்த்தைகள் இலங்கைத் தமிழ் வாசம் அடிக்கிறதே.
www.rcraja.blogspot.com
Elikkum azhagu iruppadhai unarthiyadhu sirappu ... !!!!!!!!!!!!
Naalayum varuvaan avan un kavidhai yennum kaniyai rusikka.... !!!
- un visiri
ooook... ok...
Romba azhaga yosichirukkeenga!!! :)
ena ratoda ellam pesuringa.............. rat varnicha mudhall allu neenga than neenaikuran
Post a Comment