Saturday, October 13, 2007

இங்கு வாழ்க்கை வாங்க(விற்க)ப்படும

தூங்க நினைத்து வெகுநேரம் தூக்கம் வராமல்
எழுந்தெழுதிய கவிதையிது.

அன்புத் தம்பி..!!

சிலிர்க்க வைக்கிறது
உனது வளர்ச்சி...
பெருமகிழ்ச்சி.

மூன்று வருடம் போதும்
சேமிப்பில்
தந்தையை பின்னுக்கு தள்ள.

முரண்பாடய் இருக்கிறது.
'கூண்டுப்பறவையல்ல நான் என்கிறாய்'
ஆனால்,
'கூண்டுக்குள்தான் அடைந்துகிடக்கிறாய்'.

இணையத்தால்
இதயம் இழக்கிறாய்.
கணினியில்
காலம் கழிக்கிறாய்.
தொலைகாட்சியால்
தொலைந்து போகிறாய்.
துரித உணவால்
தேகம் நச்சாக்குகிறாய்.
செல்பேசியால
சிக்கி தவிக்கிறாய்.

இரவு , பகல்
இன்று வித்தியாசமில்லை.
அழைப்பு நிறுவன இயந்திரம்.
கண்ணதாசன்
இன்றிருந்தால்.
'தூங்கு தம்பி தூங்கு' என்று சொல்வானோ ??? :)

பழகுவது எப்படி?
சிரிப்பது எப்படி?
அழுவது எப்படி?
தூங்குவது எப்படி?
உண்பது எப்படி?
வாழ்வது எப்படி?
'புத்தகம் போதும் உனக்கு'.

வார கடைசிகளில்
வாழ்க்கை
வாங்குகிறாய்.
'உல்லாச அரங்குகளில்'.

அட்டவணை
அலசுகிறாய்.
'பெற்றவர்களை பார்ப்பது எப்போது'..??
மனிதம் மறந்துகொண்டிருக்கும்
'மாத்திரை' மனிதனே..!

பழக கல்.
சுற்றம் நோக்கு.
சுயமிழக்காதே.
ரசிக்கும் மனதுகொள்.
வெற்றி பெறு.
தந்தை காலத்தில்
மிக குறைவு.
'முதியோர் இல்லம்'.
மருந்துகளோடு வாழப்போகும்
உன் காலத்தில்...???

கழட்டி எறி,
கழுத்தில் தொங்கும்
இங்கு
'வாழ்
க்கை வாங்க(விற்க)ப்படும்'
பலகையை.

5 comments:

Anonymous said...

Unmai..IT vazhkai-kku kodutha vilai athigam!

Anonymous said...

thanks lakshmi

Mangai said...

உண்மை. இதைச் சொல்லி சொல்லி ஓய்ந்து போய்க் கொண்டிருந்தேன். பிறகு தான் புரிந்தது முதலில் அதைக் கழற்ற வேண்டியது நான் தான் என்று. கழற்றி விட்டு சுதந்திரக் காற்று சுவாசித்துக் கொண்டு உங்களுக்க்ம் சொகிறேன்.

Gnanavel said...

Contemporary thinking... Very good one..Keep Writing..

Srividhya said...

Good one again!