Tuesday, July 15, 2008

நன்றிகள் பல

தமிழ் பிரவாகம் மடலாடற் குழுமம்
நடத்திய இலக்கியப் போட்டி 2008 ன்
புதுக்
கவிதைப் பிரிவில் பங்கெடுத்த
" இங்கு வாழ்கை வாங்க(விற்க) படும "
என்ற என்் கவிதை

நடுவரின் இரு சிறப்புப் பரிசில்களில்
ஒன்றாக
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது

என்பதில்
மிக்க மகிழ்ச்சி
.

போட்டி நடுவருக்கும் ,
தமிழ் பிரவாகம் மடலாடற் குழுமத்திற்க்கும்
எனது
நன்றிகள் பல.

Tuesday, June 03, 2008

^^^^^^^^ அப்பாசாமி ^^^^^^^

உன்
செயலிலும்,
கனவிலும் ,
உழைப்பிலும்,
கண்ணிலும்,
இப்படியாய் தான் உணர்த்துவாய்.
பாசத்தை பகிரங்கபடுத்த
தெரியாதுனக்கு.

அறியா வயதில்,
தெரியாமல் வெந்நீர் தெறித்திட்டதால்,
துளிநேரம் நினைவிழந்தபோது...
தேகம் நடுங்க,
நான் 'அப்பா' சாமி...
நான் 'அப்பா' வந்திருக்கேன் சாமி...
என்றெல்லவா கதறியழுது சாமியாக்கினாய்.

பண்டிகை நாட்களும்,
மதிப்பெண் சான்றிதழ் தரும் நாட்களும்,
நீ கவலையை மறக்கும் நாட்கள்.
அன்றையை,
உன் புன்சிரிப்புக்காக
தினமும் தேர்வெழுத தயாராயிருந்தேன்...


சர்க்கரை சாப்பிட
விரும்புவது அனைவரின் இயல்பு.
ஆனால்
சர்க்கரை உன்னை சாப்பிட
விரும்பியதின் விநோதம் புரியவில்லை.

எந்தவொரு
மரண நிகழ்வுகளிலும், ஈம சடங்குகளிலும்
நான் இல்லாமல் பார்த்துகொன்டாய்.
உன் மரணம் உட்பட.

"நான் இருக்கிறேன்"
என்றுன்னைபோல் தன்னம்பிக்கை சொல்ல,
இனி இங்கில்லை எவரும்.

அதெப்படி?
என் கைபிடித்து
வழிக்காட்டிய உன் கைகளுக்கு,
உன் நடைதளரும் வேலையில்,
நான் தோள்கொடுக்க வேன்டாமா?
என்ன அவசரம் உனக்கு?
என்னை விடவா,
அந்த ஆண்டவன் உன்மேல்
அன்பு வைத்தான்...?

நிகழ்வது சாத்தியமில்லை என்றாலும்,
நிசப்தமாய் கேட்கிறேன்...

என் "அப்பாசாமியே"
நாளையவது வந்துவிடு.
நிறைய பேச வேன்டும்.


6 வருடங்களாய் பேச காத்திருக்கும்,.,,
- சீனிவாசன் ஆளவந்தார்.

Wednesday, March 19, 2008

பிரிவுக்கடிதம்

இதோ !
உனக்காக...

நீ எதிர்ப்பார்க்கும்,

என் பிரிவுக்கடிதம்.


தவிர்ப்பு.

தவிர்க்க முடியாததே...!

தயாராய் தானிருக்கிறேன்.


துணிவாய் சொல்.
தவிர்ப்பு துளிர்விட்ட கணத்தை.


நிச்சயமாய்,
திருந்தவோ...

வருந்தவோ... போவதில்லை.


காரணமறியவே இக்கடிதம்.

நான்,

இப்போதும்

எப்பொழுதும் போல்

கொஞ்சம் கெட்டவன் என்பதால்..!!!